உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

மதுரை வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

மதுரை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை வழக்கறிஞர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய நியாய சன்ஹிதா (இந்திய நியாயச் சட்டம்), பாரதிய சாக் ஷிய அதினியம் (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். ரிமாண்ட் செய்யும் அதிகாரத்தை தாசில்தாருக்கு வழங்கியதை கண்டித்ததுடன், தண்டனை பெற்ற கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.நெடுஞ்செழியன் கூறுகையில், ''புதிய சட்டங்களை நீக்கும் வரை போராட்டம் தொடரும். இச்சட்டங்களின் படி கைது செய்தால் 'லாக்கப்' மரணங்கள் அதிகரிக்கும். மக்களை பாதுகாக்கவே போராட்டத்தில் இறங்கியுள்ளோம். விருத்தாச்சலத்தில் ஜூலை 13ல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கூட்டம் நடக்கவுள்ளது. அதில் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப அடுத்த நடவடிக்கை இருக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி