உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுற்றுலாப் பயணிகள் எரிச்சல்

சுற்றுலாப் பயணிகள் எரிச்சல்

மதுரை : மதுரையில் வடமாநிலங்களை சேர்ந்த பிச்சைக்காரர்கள்நூற்றுக்கும் மேற்பட்டோர் முகாமிட்டு, பொதுமக்களை தொல்லைப்படுத்துகின்றனர்.சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள மதுரையில் சுற்றுலாப்பயணிகளை தொல்லைக்கு உள்ளாக்கும் உள்ளூர் பிச்சைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் காப்பங்களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் தற்போது ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களை சேர்ந்த பிச்சைக்காரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரையில் முகாமிட்டுள்ளனர். வாகனங்கள் நிற்கும் முக்கிய சிக்னல் பகுதியில் இவர்கள் வாகன ஓட்டிகளிடம் பிச்சை கேட்டு, அவர்களின் கவனத்தை திசைதிருப்புகின்றனர்.மீனாட்சிஅம்மன் கோயில், நாயக்கர் மகால், காந்திமியூசியம் பகுதிகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எரிச்சலடையச் செய்யும் வகையில் இவர்களின் நடவடிக்கைகள் அமைகிறது. பணம் அல்லது ஏதாவது ஒரு பொருள் கிடைக்கும் வரை அவர்களை குழுவாக சூழ்ந்து விடுகின்றனர்.தெருவோரத்திலும், வெட்டவெளியிலும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என குடும்பத்துடன் முகாமிட்டுள்ள இவர்கள் குறிப்பிட்ட பகுதியில் சில நாட்கள் தங்கி, அடுத்த நகருக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.மதுரையில் பொதுமக்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொது இடங்களில் பிச்சை என்னும் பெயரில் பெரும் இடையூறை ஏற்படுத்தி வரும் இந்த குழுவினரை காப்பகங்களில் சேர்க்கவோ, மாற்று தொழில் வசதி அல்லது அவர்களின் சொந்த மாநிலங்களில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை