உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலருக்கு எதிராக மனு

மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலருக்கு எதிராக மனு

மதுரை:மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் பக்கத்து கட்டட சுவரை இடிக்க தூண்டியதுடன், மிரட்டுவதாக மாநகராட்சி 37வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் செல்லத்துரைக்கு எதிராக ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.கோமதிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை தாக்கல் செய்த மனு:வடக்கு ஆவணி மூல வீதியில் 87 நம்பரிலுள்ள கட்டடத்தை ராமகிருஷ்ணன் என்பவரிடம் ஜூலை 7ல் விலைக்கு வாங்கினேன். பக்கத்து இடம் செல்லத்துரைக்கு சொந்தமானது. ஆக., 4ல் கட்டடத்தை மராமத்து பார்க்க சென்ற போது, செல்லத்துரை மிரட்டினார். அவர், தன் ஆதரவாளர்களை வீட்டு கட்டடத்தின் மேற்கு சுவரை இடிக்க வைத்தார். விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் விசாரித்த போது, சுவரை இடிக்க மாட்டேன் என செல்லத்துரை உறுதியளித்தார். பின், புகார் கொடுத்ததற்காக மிரட்டுகிறார். எனக்கும், கட்டடத்திற்கும் பாதுகாப்பு வழங்க இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதி ஆர்.மாலா முன் விரைவில் விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ