உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஞ்சமி நில ஆக்கிரமிப்புகள் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

பஞ்சமி நில ஆக்கிரமிப்புகள் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

.மதுரை : தேனி அல்லிநகரத்தில் ஆக்கிரமிப்புக்குள்ளான பஞ்சமி நிலங்களை, மூன்று மாதங்களுக்குள் மீட்டு, உரியவரிடம் ஒப்படைக்க தாசில்தாருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.தேனி மாவட்ட பஞ்சமி நில மீட்பு இயக்க செயலாளர் வெங்கடேசன் தாக்கல் செய்த பொது நல வழக்கு:அல்லிநகரத்தில் 1926 ல் தீரன்மாதரை என்பவருக்கு பஞ்சமி நிலம் 3 ஏக்கர் 96 சென்ட் ஒதுக்கப்பட்ட நிலத்தை தலித்துகளுக்கு விற்க நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிலங்களை மற்ற சமுதாயத்தினர் ஆக்கிரமித்தனர். அரசின் தலைமை செயலாளர் மற்றும் நில சீர்திருத்த கமிஷனர் ஆகியோர், கடந்தாண்டு ஜூலை 5 ல் பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை அகற்ற, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கபட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.வெங்கடேஷ் ஆஜரானார். நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம். சுந்தரேஷ் பெஞ்ச், தாசில்தார், பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை அகற்ற மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !