உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போட்டிகளில் அசத்திய மாற்றுத் திறனாளிகள்

போட்டிகளில் அசத்திய மாற்றுத் திறனாளிகள்

மதுரை, : மதுரைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், நேற்று தென்றல் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்ற கலை இலக்கிய விழா நடந்தது.மக்கள் சக்தி இயக்கம் நிர்வாகி அசோகன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் பாலாஜி, ஆசிரியர்கள் கார்மேகம், ஜெரோன் பங்கேற்றனர். பார்வையற்றோர், காது கேளாதோர், மூளை வளர்ச்சி குன்றியோர் பங்கேற்றனர். பேச்சு, கவிதை, பாட்டு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சாமிநாதன் தலைமையில் மாநகராட்சி துணை கமிஷனர் தர்ப்பகராஜ் பரிசுகளை வழங்கினார். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தலைவர் மகேந்திரவேல், குழந்தை உளவியல் நிபுணர் ராணி, பேராசிரியர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர். மாநில அளவில் தொடர் சாதனையை பெற்றதற்காக தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தலைவர் நாகஜோதி, ஒருங்கிணைப்பாளர் இன்பவாணன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி