உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண் மர்மக்கொலை

பெண் மர்மக்கொலை

மதுரை : மதுரை அருகே கல்மேடு களஞ்சியம் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் பாலசுப்பிரமணியன். மனைவி முத்துலட்சுமி 27. இவர்களுடைய சொந்தஊர் எட்டையாபுரம் அருகே சக்கம்மாபுரம். குழந்தைகள் கவுசல்யா 14, கவுதம் 12. மதுரையில் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கின்றனர். கருத்து வேறுபாட்டால் 6 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். பாலசுப்பிரமணியன் தற்போது சக்கம்மாபுரத்தில் உள்ளார். நேற்று மாலை 5.30 மணிக்கு கவுசல்யா பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தார். முத்துலட்சுமி மர்மமான முறையில் கழுறுத்து நெறிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். கள்ளக்காதல் அல்லது முன் விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என சிலைமான் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !