உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிலம்பாட்டத்தில் சாதித்த மதுரை மாணவி தற்கொலை

சிலம்பாட்டத்தில் சாதித்த மதுரை மாணவி தற்கொலை

தல்லாகுளம்: மதுரையில் சிலம்பாட்டத்தில் சாதித்த பள்ளி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த, 16 வயது மாணவி, மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சிறு வயதில் இருந்தே சிலம்பம் விளையாடி, மாநில அளவில் பல பதக்கங்களை பெற்றார். தேசிய போட்டியில் சாதிக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. கடந்த, மூன்று மாதத்திற்கு முன், மாணவிக்கு வலது கை மணிக்கட்டு ஜவ்வு விலகியது தெரிந்தது. பெற்றோர் ஆனையூருக்கு அழைத்து சென்று தனியாரிடம் மாவுக்கட்டு போட்டனர். இந்நிலையில், மதுரை திருமங்கலத்தில் நடந்த மாவட்ட போட்டியில் கலந்து கொண்டு, மூன்றாவது இடம் வந்தார். அப்போது, 'கை ரொம்ப வலிக்கிறது. அதனால் தான் முதல் பரிசு கிடைக்கவில்லை' எனக்கூறி அழுது, மூன்றாவது பரிசை அவர் பெறவில்லை. ஒரு மாதமாக, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
நவ 07, 2025 05:55

நம்பும்படியாக இல்லை. உள்ளூர் அரசியல்வாதிகளைப் பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும். அரசியல் ரௌடிகளுக்குப் பயந்து பெற்றோர்கள் உண்மையை மறைக்க வாய்ப்புண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை