உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்

மாணவர்களுக்கு முடநீக்கியல் சிறப்பு முகாம்

மதுரை : மதுரை கல்வி மாவட்டத்தில் முடநீக்கியல் சிகிச்சை தேவைப்படும், 6 முதல் 10 வரை படிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. திருப்பரங்குன்றம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் இயன்முறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். எனவே உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை இம்முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும், என கல்வி அதிகாரி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !