உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர்கள் 2பேர் பலி

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர்கள் 2பேர் பலி

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி ஒன்றியம் பள்ளபட்டி புதூரைச் சேர்ந்த பொன்மணி என்பவரின் மகன்கள் யுவராஜ்(11), சின்ராஜ்(7). இருவரும் பள்ளபட்டி துவக்கப்பள்ளியில் 5 மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை 7 மணிக்கு இருவரும் குளிப்பதற்காக அருகிலுள்ள பொதுக் கிணற்றிற்கு சென்றனர். கிணற்றிலிருந்த வாளியால் சின்ராஜ் தண்ணீர் இறைக்கும்போது தடுமாறி கிணற்றில் விழுந்தான். அவனைக் காப்பாற்றுவதற்காக கிணற்றின் உள்ளே இருந்த படிகளில் இறங்கி கையைக்கொடுத்து அவனைக் காப்பாற்ற முயற்சிக்கையில் யுவராஜும் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்ததில் இருவரும் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்தனர். கொட்டாம்பட்டி தீயணைப்புப் போலீசார் கிணற்றில் இறங்கி இருவரின் சடலங்களையும் மீட்டனர். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ