உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரிசி விலை மாற்றமில்லை

அரிசி விலை மாற்றமில்லை

மதுரை : டீசல் விலை உயர்வால், கடந்த வாரம் சரக்கு வேன் வாடகை கட்டணம் கி.மீ.,க்கு ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டதால், மதுரையில் கர்நாடகா அரிசி வகைகள் கிலோவிற்கு ஒரு ரூபாய் அதிகரித்தது. இந்த வாரம் இவ்விலையில் மாற்றமில்லை. அரிசி ஆலை உரிமையாளர் சங்க செயலாளர் சந்திரன் கூறுகையில், ''ஒரு கிலோ காவிரி சோனா டீலக்ஸ் ரூ.24.50லிருந்து ரூ.25.50க்கும், கர்நாடகா டீலக்ஸ் பொன்னி ரூ.31லிருந்து ரூ.32க்கும் விற்கப்படுகிறது. மற்ற அரிசி விலைகளில் மாற்றமில்லை. மதுரை டீலக்ஸ் பொன்னி பழசு ரூ.30, அடுத்த ரகம் ரூ.23.50, வெள்ளை பொன்னி பழசு ரூ.35, செல்லப்பொன்னி ரூ.20.50, முத்து செல்ல பொன்னி ரூ.18.50க்கும் விற்கப்படுகிறது.ஐ.ஆர்., இருபது ரூ.24, புதுசு ரூ.21, ஐ.ஆர்., முப்பத்தாறு ரூ.19-20க்கும், மாவு பச்சரிசி ரூ.21.50க்கும், பிரியாணி அரிசி ரூ.45 - ரூ.52 வரையும் விற்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை