| ADDED : பிப் 24, 2024 05:18 AM
உசிலம்பட்டி, : உசிலம்பட்டியில் உள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி மாசிப்பச்சை திருவிழா விமரிசையாக நடக்கும். கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இந்த ஆண்டு திருவிழா நடத்துவதற்கான 15 ஆம் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை பாப்பாபட்டியில் நடந்தது.எட்டும் இரண்டும் பத்து தேவர்கள், ஐந்து பூஜாாரிகள், கோடாங்கிகள், அக்கா மக்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.மாசிப்பெட்டி எடுத்து வரும் பூஜாரிகள், பெரிய பூஜாரி தேர்வு செய்ததில் உள்ள கருத்துவேறுபாடுகளை பேசித்தீர்த்து பெட்டி எடுத்து வர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருவிழாவிற்கு கொல்லிமலைராக்கு, பிரம்மகுலராக்கு சிலை செய்வதற்காக அனைவரும் இணைந்து மண் எடுத்து கொடுத்தனர்.