உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆரியங்காவில் மண்டல பூஜை நிறைவு

 ஆரியங்காவில் மண்டல பூஜை நிறைவு

↓மதுரை: கேரளா ஆரியங்காவு தர்ம சாஸ்தா கோயிலில் திருக்கல்யாண மண்டல மகா உற்ஸவ பூஜைகள் நிறைவுற்றன. அனைத்து சாஸ்தா கோயில்களிலும் நேற்று மண்டல மகா உற்ஸவம் நடந்தது. அதையொட்டி ஆரியங்காவில் அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 8:00 மணிக்கு தாந்திரீக முறையிலான கலச பூஜை, களப கலச பூஜை சடங்குகள் துவங்கின. கோகுலத்துமடம் தந்திரி சம்பு போத்தி பூஜைகளை நடத்தினார். மதியம் 1:00 மணிக்கு பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட மூல விக்கிர சந்நிதிப் பேழைக்கு கலசாபிஷேகம், அர்ச்சனா ரூபத்திற்கு களபாபிஷேகம் நடந்தது. சர்வ ராஜ அலங்காரத்துடன் காட்சியளித்த சுவாமிக்கு மகா தீபாராதனையுடன் மண்டல கால பூஜை நிறைவு பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ