உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

மதுரை : கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 முறை இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் டிச. 16 முதல் ஜன. 20 வரை நடக்கிறது. 57 குழுக்கள் மூலம் 2 லட்சத்து 7000 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கால்நடை வளர்ப்போர் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி