மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை நகரில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார். ''பொங்கல் பண்டிகைக்கு ரூ.10 ஆயிரம் தி.மு.க., கொடுத்தாலும் மக்கள் ஓட்டளிக்க தயாராக இல்லை. மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் குறித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்துவது தேர்தல் நாடகம்'' என்றார். திருப்பரங்குன்றம் மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமையில் திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முருகன், இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், நிர்வாகிகள் செல்வகுமார், பாலமுருகன் ஆகியோர் மரியாதை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மேலுார் அ.தி.மு.க., நகர் செயலாளர் சரவணகுமார், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் அவைத்தலைவர் ராஜேந்திரன், கருங்காலக்குடியில் கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன் தலைமையில் கட்சியினர் மரியாதை செய்தனர். சோழவந்தான் பாலகிருஷ்ணாபுரத்தில் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் கிளைச் செயலாளர்கள் கருப்பையா, பழனியாண்டி, ஒன்றிய பொருளாளர் தங்கப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் முருகேசன், நிர்வாகிகள் ராஜபாண்டி, ராமு, மணிகண்டன், வழக்கறிஞர் தங்கப்பாண்டி, மணி உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமையில், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் ராஜேஷ்கண்ணா, செந்தில்குமார், சந்தனத்துரை, தனசேகரன், ராமசாமி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்ராம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பரவையில் பேரூர் செயலாளர் ராஜா தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன், கவுன்சிலர் சவுந்தரபாண்டி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயராஜ், முன்னாள் கவுன்சிலர் முத்துப்பாண்டி உள்ளிட்டோரும், முன்னாள் அவை தலைவர் நாகமலை தலைமையில் வார்டு செயலாளர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் ராமர், ராஜசேகர் ஆகியோரும் மரியாதை செய்தனர். உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமாராஜா, ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளர் துரைதனராஜன், முன்னாள் நகராட்சி தலைவர் சகுந்தலா, வக்கீல் பிரிவு லட்சுமணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் பங்கேற்றனர்.