மேலும் செய்திகள்
கிடப்பில் சுகாதார வளாகம் கட்டுமான பணி
22-Apr-2025
சோழவந்தான்: வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சி அய்யப்பநாயக்கன்பட்டியில் ஏற்கனவே கட்டிய சுகாதார வளாகம் பயன்படாத நிலையில் கூடுதல் கழிப்பறைகளைக் கட்டி அரசு நிதியை வீணடித்துள்ளனர்.இங்குள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி எதிரே 2014ல் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதன்பின் செயல்படவில்லை.இருப்பினும் 2019 ல் ரூ.1.30 லட்சம் செலவில் பராமரித்தனர்.இந்நிலையில் சுகாதார வளாகம் அருகே துாய்மை பாரதம் இயக்க திட்டத்தில் 2024ல் ரூ.3.50 லட்சத்தில் சிறிய சமுதாய வளாகமும் கட்டி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில், அதன் அருகிலேயே கூடுதல் கழிப்பறை கட்டி அரசு நிதியை வீணடித்துள்ளனர். மத்திய அரசு ஒதுக்கும் நிதியை அதிகாரிகள் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
22-Apr-2025