உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நன்னெறி வகுப்பு முகாம்

நன்னெறி வகுப்பு முகாம்

பெருங்குடி : மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் நன்னெறி வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் முகாம் நடந்தது. மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் சங்கர கோமதி இறை வணக்கத்துடன் துவங்கியது. கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் ரவி வரவேற்றார். திருவிளையாடல் மையம், ஆன்மிக வகுப்புகள் குறித்து ஆராய்ச்சி மைய அமைப்பாளர் சங்கரநாராயணன், ஆன்மிக வகுப்புக்கான பாடத்திட்டம் மற்றும் நெறிமுறைகள் குறித்து ஆராய்ச்சி மைய நன்னெறி வகுப்பு மாநில தலைவர் முருகேசன், மாநில மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி, நாட்டு நலனுக்காக நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற தலைப்பில் மைய தலைவர் சந்திரசேகரன், மையத்தின் ஓராண்டு திட்டங்கள் குறித்து செயலாளர் கண்ணன், பயிற்சி வகுப்பின் பயன்கள், திட்டங்கள் குறித்து சாந்திகுமார சுவாமிகள் பேசினர். மாநில மகளிர் துணை அமைப்பாளர் சங்கரகோமதி உட்பட பலர் பங்கேற்றனர். மைய துணைச் செயலாளர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை