மேலும் செய்திகள்
இந்திய வீரர்களுக்கு வரவேற்பு
5 minutes ago
நெல் விவசாயிகள் மழையால் மகிழ்ச்சி
5 minutes ago
நெல்லை பாலுவுக்கு விருது
15 hour(s) ago
மதுரையில் 12 விமானங்கள் ரத்து
22 hour(s) ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை மஹா தீபம் ஏற்ற வேண்டும் என, ஆண்டுதோறும் ஹிந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்தாண்டும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், 'நீதிமன்றத்தை மதிப்போம். திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு தீர்ப்பு உள்ளது. மற்றொரு வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. எனவே ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக அனைவரும் அந்தந்த பகுதியில் கூட்டு வழிபாடு, வேல் வழிபாடு செய்ய வேண்டும். அரசுக்கு நல்ல புத்தி வேண்டும் என்ற பிரார்த்தனை மூலம் வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டு இருந்தார். அதன்படி ஹிந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயிலில் வேலுக்கு பாலாபிஷேகம் செய்து, வேல் வழிபாடு, கூட்டு பிரார்த்தனை செய்தனர். பின்பு நுாற்றுக்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் சென்று தென்கால் கண்மாயில் கரைத்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரசாந்த் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சேவுகன், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, கோட்டச் செயலாளர் அரசுபாண்டி, நகர் தலைவர் சூர்யா, பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், ஓ.பி.சி. அணித் தலைவர் சரவணகுமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் தங்கதுரை, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் சமுத்திர பாண்டியன் பங்கேற்றனர்.
5 minutes ago
5 minutes ago
15 hour(s) ago
22 hour(s) ago