உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சேறும் சகதியுமான ஆபத்து ரோடு

சேறும் சகதியுமான ஆபத்து ரோடு

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகே உள்ள கிராசிங்கில் தினமும் 60 முறைக்கு மேல் ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகினர். இதையடுத்து தற்போது ரூ. 34 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது. பாலம் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு மாற்றுப்பாதை இதுவரை முழுமையாக ஏற்பாடு செய்யவில்லை. வேலை நடக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குண்டும் குழியுமான ரோடு வழியாகவே பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாக பெய்த மழை காரணமாகவும், பால பணிகளுக்காக கொண்டு செல்லப்படும் மண், கல் ரோட்டில் விழுவதாலும், தற்போது ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். தண்ணீர் தேங்கி நிற்கும் போது ரோடு எது பள்ளம் எது எனத் தெரியாமல் அவதிக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் விளக்கு வசதியும் இல்லாமல், வழுக்கி விழுவது என்பது தொடர்கதையாக உள்ளது. பாலம் அமைக்கும் நிறுவனத்தார் பொதுமக்கள் எளிதாக சென்றுவர நல்ல மாற்றுப்பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை