உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சவுராஷ்ட்ரா கல்லுாரியில் பல்திறன் போட்டிகள்

சவுராஷ்ட்ரா கல்லுாரியில் பல்திறன் போட்டிகள்

திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்ட்ரா கல்லுாரி முதுகலை எம்.சி.ஏ., மற்றும் ஐ.ஐ.சி., துறைகள் சார்பில் 'ஹேக்கத்தான் 2025' என்ற தலைப்பில் மாணவர்களின் படைப்பாற்றல், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். ஐ.ஐ.சி. ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவர்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் 32 அணிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். 'எபிக் மைண்ட்' இயக்குனர் சூர்யா பிரசன்னா நடுவராக செயல்பட்டார். அதிக புள்ளிகள் பெற்ற அமெரிக்கன் கல்லுாரி முதல் பரிசும், தியாகராஜர் கலை கல்லுாரியின் 2 அணிகள் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசை வென்றனர். போஸ்டர் தயாரிப்பு போட்டியில் சிறப்பாக பங்கேற்ற பாத்திமா கல்லுாரி அணியினர் சிறப்பு பரிசை வென்றனர். நிர்வாகக் குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பரிசு வழங்கினார். எம்.சி.ஏ., துறைத் தலைவர் அனுராதா நன்றி கூறினார். பேராசிரியர்கள் மீனலோச்சினி, ஹரி கிருஷ்ணன் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை