மைசூரு - துாத்துக்குடி ரயில் 3 மணி நேரம் தாமதம்
மதுரை: மைசூரு - துாத்துக்குடி ரயில் நேற்று, 3 மணி நேரம் தாமதமாக மதுரை வந்தது. நேற்றுமுன்தினம் மைசூரு - துாத்துக்குடி ரயில் (16236) ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 7:20 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டது. கடலுார் போர்ட்-மைசூரு இணைப்பு ரயில் தாமதமாக வந்ததால், துாத்துக்குடி ரயில் கிளம்ப தாமதமானதாக ரயில்வே தெரிவித்துள்ளது. வரும் வழியில் பெங்களூரு -ஓசூர் பிரிவில் பெலந்துார் ரோடு - கார்மேலரம் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக, பெங்களூரு கண்டோன்மன்டில் இருந்து புறப்பட்ட ரயில் கார்மேலரத்திற்கு இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் நேற்று 3:00 மணி நேரம் தாமதமாக காலை 10:25 மணிக்கு மதுரை வந்தது. 3:21 மணி நேரம் தாமதமாக மதியம் 1:36 மணிக்கு துாத்துக்குடி சென்றது. இதனால் திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்வோர் அந்தியோதயா, திருவனந்தபுரம் இன்டர்சிட்டி உள்ளிட்ட இணைப்பு ரயில்களை தவற விட்டு அவதிப்பட்டனர். மைசூரு - துாத்துக்குடி ரயில்அடிக்கடி தாமதமாக வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.