தேசிய டென்னிஸ் போட்டி
மதுரை: மதுரை டென்னிஸ் பவுண்டேஷன் சார்பில் அகில இந்திய அளவிலான டென்னிஸ் ரேங்கிங் (அய்ட்டா) போட்டிகள் மதுரைக் கல்லுாரியில் நடக்கிறது. ஆடவர் போட்டி முடிவுகள்
காலிறுதிக்கு முந்தைய ஒற்றையர் பிரிவு போட்டியில் சம்பத் சஞ்சய் 6 - 4, 6 - 2 செட்களில் முகமது ரிபத்தை வீழ்த்தினார். நரேஷ் பாபு 6 - 0, 6 - 3 செட்களில் ஏகன் பாலகுமாரை வீழ்த்தினார். ஜீவித் ரோஹித் 6 - 0, 6 - 0 செட்களில் சஞ்சீவை வீழ்த்தினார். ஜெகன் ரோகித் 1 - 6, 6 - 0, 6 - 2 செட்களில் சோ ஜோஸ் தாமஸை வீழ்த்தினார். நிகில் அழகப்பன் 2 - 6, 6 - 3, 6 - 4 செட்களில் மிதின் காளீஸ்வரை வீழ்த்தினார். இஷான் சுதர்சன் 6 - 0, 6 - 0 செட்களில் சபரீஷை வீழ்த்தினார். கேசவ கார்த்திகேயன் 6 - 2, 6 - 4 செட்களில் அத்வைத் செந்திலை வீழ்த்தினார். ரிதிக் ஜெயந்த் 6 - 3, 6 - 3 செட்களில் சித்தார்த் ஆனந்தை வீழ்த்தினார்.இரட்டையர் பிரிவு முதல் காலிறுதி போட்டியில் சம்பத், ரிதிக் ஜோடி 6 - 0, 6 - 1 செட்களில் விமல்குமார், கார்த்தி கவுரியை வீழ்த்தினர். 2வது போட்டியில் நரேஷ்பாபு, தேவ் அத்வைத் ஜோடி 7 - 5, 7 - 6 (5) செட்களில் ஜெகன் ரோஹித், சந்தோஷ் ஸ்ரீராம் ஜோடியை வீழ்த்தினர். 3வது போட்டியில் ஹனுமேஷ், ஜெகத் அஸ்வின் ஜோடி 6 - 3, 6 - 2 செட்களில் கேசவ கார்த்திகேயன், மிதின் ஜோடியை வீழ்த்தினர். 4வது போட்டியில் ஜீவித், இஷான் ஜோடி 6 - 0, 6 - 0 செட்களில் ஏகன், அசிந்த்யா விஜயபாலாஜியை வீழ்த்தினர். மகளிர் பிரிவு முடிவுகள்
தனுஸ்ரீ 6 - 4, 6 - 1 செட்களில் நிமிஷாவையும், ஹீரா 6 - 3, 6 - 0 செட்களில் திவ்யதர்ஷினியையும் வீழ்த்தினர். தியா ரவிக்குமார் 6 - 1, 6 - 0 செட்களில் ஜனனியையும் அதிதி 6 - 4, 6 - 3 செட்களில் சரூராவையும் வீழ்த்தினர். வீணா 6 - 4, 6 -3 செட்களில் ஹன்ஷினியையும் ஆதிரை 6 - 4, 7 - 5 செட்களில் தியா ஹரி கிருஷ்ணனையும் வீழ்த்தினர். தியா ராஜ்குமார் 6 - 0, 6 - 2 செட்களில் சாதனாவையும் நல்யாழினி 6 - 1, 6 - 1 செட்களில் பவிஷனாவையும் வீழ்த்தினர்.இரட்டையர் பிரிவு காலிறுதி முதல் போட்டியில் நல்யாழினி, தியா ரவிக்குமார் ஜோடி 6 - 1, 6 -1 செட்களில் அதிதி, ஆதிரை ஜோடியை வீழ்த்தினர். 2வது போட்டியில் தியா ராஜ்குமார், சாதனா சம்பத்குமார் ஜோடி 6 - 1, 6 - 4 செட்களில் பவிஷ்னா, கனிஷ்கா ஜோடியை வீழ்த்தினர். 3வது போட்டியில் ஜனனி, நிமிஷா ஜோடி 6 - 1, 6 - 3 செட்களில் தியா ஹரிகிருஷ்ணன், சாதனா கிருஷ்ணராஜ் ஜோடியை வீழ்த்தினர். 4வது போட்டியில் தனுஸ்ரீ, ஹீரா ஜோடி 6-2, 6-0 செட்களில் பாக்யா, அனகா ஜோடியை வீழ்த்தினர். அய்ட்டா சி.இ.ஓ., ஹிடன் ஜோஷி ஏற்பாடுகளை செய்திருந்தார்.