உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நியோமேக்ஸ் மோசடி: கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த கூட்டம்

நியோமேக்ஸ் மோசடி: கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த கூட்டம்

மதுரை : மதுரை நியோ மேக்ஸ் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவுபடி நிலம் கொடுப்பதற்கான முகாம் நேற்று நடந்தது.மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் ரூ.பல கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது. இதன் இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உட்பட 25க்கும் மேற்பட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 17 நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.இதுவரை நிறுவனத்திற்கு சொந்தமான 19 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.76 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரத்து 577. இந்நிலையில் நியோ மேக்ஸில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்திற்கு ஈடாக நிலங்களை பதிவு செய்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட 1200க்கும் மேற்பட்ட புகார்தாரர்களுக்கு நிலங்களை பதிவு செய்ய கொடுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. புகார்தாரர்கள் நுாற்றுக்கணக்கானோர் குவிந்தனர். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குழு புகார்தாரர்களின் விருப்பங்களை எழுத்துப்பூர்வமாக பெற்று வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி