மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி// டிச.27 க்குரியது
9 minutes ago
கடலைப்பருப்புக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்
9 minutes ago
கட்டபொம்மன் சிலைக்கு இடம் கலெக்டரிடம் பா.ஜ.,வினர் மனு
12 minutes ago
மதுரை: மதுரை கே.கே. நகரில் புதிய ஆதார் சேவை மைய திறப்பு விழா நடந்தது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டபுதிய ஆதார் சேவை மையத்தை மதுரை மாவட்ட துணை கலெக்டர் காளீஸ்வரி திறந்து வைத்தார்.பெங்களூருவிலுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மண்டல அலுவலக இயக்குநர் பவன்குமார் பஹ்வா தலைமை வகித்தார். புதிய ஆதார் சேவை மையம், மாடல்-பி தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் எட்டு கணினி முனையங்கள் செயல்படுவதால், தினமும் 400 முதல் 500 பேர் ஆதார் பணிகளை தடையின்றி மேற்கொள்ளலாம். இம்மையத்தில் அனைத்து வயதினருக்கும் புதிய ஆதார் பதிவு செய்தல், புகைப்படம், கைரேகை போன்ற பயோமெட்ரிக் விவரம் புதுப்பித்தல், பெயர், முகவரி, கைபேசி எண் திருத்தங்களைச் செய்யும் வசதிகள் உள்ளன. பொதுமக்கள் வசதிக்காக மையம் முழுவதும் குளிரூட்டப்பட்டு, நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்க தனித்தனி கவுண்டர்கள் செயல்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வருவதற்கு சக்கர நாற்காலி வசதி உண்டு. புதிய ஆதார் பதிவு, ஐந்து மற்றும் 15 வயது குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் சேவை வழக்கம் போல இலவசமாக வழங்கப்படும். மண்டல இயக்குநர் பவன் குமார் பஹ்வா கூறுகையில், 'நாடு முழுவதும் 480-க்கும் மேலான ஆதார் சேவை மையங்களை நிறுவும் திட்டம் இது.தமிழகத்தில் குறைவான மையங்களே உள்ளன. அதனை 2026 செப்டம்பருக்குள் 30 மையங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.2026 ஜனவரி முதல் வாரம் சென்னையில் மற்றொரு மையம் திறக்கப்பட உள்ளது. இது அரசின் டிஜிட்டல் சேவையை பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சி' என்றார்.
9 minutes ago
9 minutes ago
12 minutes ago