உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஸ்விக்கி, ஸோமட்டோவுக்கு மதுரையில் நோ ஆர்டர் ஓட்டல்கள் சங்கம் முடிவு

ஸ்விக்கி, ஸோமட்டோவுக்கு மதுரையில் நோ ஆர்டர் ஓட்டல்கள் சங்கம் முடிவு

மதுரை: 'கமிஷன் தொகையை குறைக்காத ஸ்விக்கி, ஸோமட்டோ நிறுவனங்களுக்கு இனி ஓட்டல்களில் இருந்து உணவு ஆர்டர் தருவதில்லை' என தென்மண்டல ஓட்டல்கள் சங்கத் தலைவர் குமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களிடம் இருநிறுவனங்கள் சர்வீஸ் சார்ஜ், ஜி.எஸ்.டி., என தனியாக வசூலிக்கின்றன. எங்கள் ஓட்டல்களில் ரூ.80க்கு விற்கும் உணவை வாங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு ரூ.120க்கு விற்கின்றன. எங்களுக்கு ரூ.80 தராமல் அதிலும் 30 சதவீதம் பிடித்தம் செய்கின்றன.எங்களை கேட்காமல் 10 சதவீத விளம்பர செலவு என தனியாக வசூல் செய்கின்றன. மதுரையில் 100 ஓட்டல்களில் இருந்து இந்நிறுவனங்கள் உணவு ஆர்டர்கள் எடுக்கின்றன. கடைகளுக்கு ஏற்ப தினமும் அல்லது வாரந்தோறும் பணத்தை பட்டுவாடா செய்கின்றன. நிறுவனங்களின் கமிஷன் தொகை அதிகமாகவும், எங்களுக்கு விலை கட்டுப்படியாகாமலும் இருக்கிறது. வாடிக்கையாளருக்கும் கூடுதல் செலவாகிறது.கமிஷன் தொகையை குறைக்க மறுத்ததால் நாமக்கல்லில் ஸ்விக்கி, ஸோமட்டோ ஆர்டர்களை வாங்குவதில்லை என ஓட்டல் சங்கம் முடிவெடுத்துள்ளது. சென்னையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. மதுரையில் 100 ஓட்டல்களில் இருந்தும் இரு நிறுவனங்களிடம் இருந்தும் உணவு ஆர்டர்கள் பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

A Nagarajan
ஜூலை 07, 2025 21:22

உண்மைதான். சுவிக்கி ஸ்மோடோ நிறுவனங்கள் மிகப்பெரிய கொள்ளைகளில் ஈடுபட்டு உள்ளன. அவற்றுக்கு தடை விதிப்பதை வரவேற்கிறேன்


A. Thiruppathi
ஜூலை 07, 2025 02:10

அருமை.


R Barathan
ஜூலை 06, 2025 06:40

அருமை. இப்படி சுலபமாக காசு பார்க்கும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்.இதே போல் பகல் கொள்ளை அடிக்கும் அடையார் ஆனந்த பவன் ஓட்டலையும் தடை செய்ய வேண்டும்.


Elango S
ஜூலை 06, 2025 07:24

சுலபமாக காசு பார்க்கும் நிறுவனங்களை வளர்த்து விடுபவர்கள் யார் அவர்களை விமர்சனம் செய்யுங்கள் முதலில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை