மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா
29-Oct-2024
மதுரை: மதுரை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவ., 20 முதல் 27 வரை 90 குழுக்களைச் சார்ந்த பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. 11ம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு குழுவிலிருந்தும் 25 பேர் பங்கேற்றனர்.முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வழிகாட்டுதலில் மாவட்ட கல்வி அலுவலர் அசோக்குமார், தனியார் பள்ளி கல்வி அலுவலர் சுதாகர், திண்டுக்கல் மாவட்ட என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் சவுந்தரராஜன், தேனி மாவட்ட தொடர்பு அலுவலர் நேருராஜன், விருதுநகர் ஆரிப், பிரிட்டோ பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர்.முகாமின் சிறப்பம்சங்களாக, சுகஜீவிதா ஒரு குழுவிற்கு 50 வீதம் 4500 மரக்கன்றுகள் வழங்கினார். வாசன் கண் மருத்துவமனை சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக 4,500 மஞ்சப்பை வழங்கினர். இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். பல்வேறு விழிப்புணர்வுகள்அளிக்கப்பட்டன. தினமும் மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை மாவட்ட என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் ராஜகுமார், நவநீதகிருஷ்ணன் செய்திருந்தனர்.
29-Oct-2024