உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு

பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு

வாடிப்பட்டி : வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தும் இடங்களை ஆக்கிரமிக்கும் டூவீலர்களால் பயணிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது.மதுரையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றன. இப்பகுதி கிராமங்களுக்கும் இங்கிருந்து பஸ், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் ஸ்டாண்டில் நிறுத்தும் பஸ்களை கடந்துதான் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை வாகனங்கள் செல்ல வேண்டும். 'பிஸி'யாக இருக்கும் இந்த பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்த வேண்டிய 'டிராக்'குகளில் டூவீலர்கள், கார் போன்ற வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இதனால் பஸ்களை பஸ் ஸ்டாண்ட் நடுவே நிறுத்துகின்றனர். நுழைவுவாயில், வெளியேறும் பகுதியில் ஆக்கிரமிப்பு வாகனங்களால் பயணிகளுக்கும், சிகிச்சைக்கு வருவோருக்கும் இடையூறு ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை