உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றுத்திறனாளிகள் தீர்மானம்

பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றுத்திறனாளிகள் தீர்மானம்

மதுரை: 'மாற்றுத்திறனாளி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினர். தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இணையவழி மாநில பொதுக்குழுக் கூட்டம் மாநில தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. செயலாளர் மாசிலாமணி செயலாக்க திட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஜெய்னுலாபுதீன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து கோரிக்கைகளை தெரிவிப்பது, 2 ஆண்டுகளுக்கு மேலும் மதிப்பூதியம், தொகுப்பூதியம், சிறப்பூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளை நிரந்தரப்படுத்தும் அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். 30.6.2016 முதல் முன்தேதியிட்டு அரசு ஊழியர், ஆசிரியர்கள் பதவி உயர்வில் 4 சதவீதம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தல் ஆணை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்தை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர், ஆசிரியர்கள் அளவிலாவது முதற்கட்டமாக நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை