உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மறுகால் பாயும் நிலையூர் பெரிய கண்மாய்

மறுகால் பாயும் நிலையூர் பெரிய கண்மாய்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளிலுள்ள கண்மாய்களில் பெரிய கண்மாயான நிலையூர் கண்மாய் தொடர்ந்து நான்காவது ஆண்டாக மறுகால் பாய்கிறது.வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய்கள்வழியாக வந்து இக்கண்மாய் நிரம்பும்.இதன் மூலம் 700 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய் நிரம்பினால் 25 கி.மீ., சுற்றளவிற்கு நிலத்தடி நீர் உயரும். இரண்டு ஆண்டுகளுக்கு நீர்நிலைகள் வற்றாது.இந்தாண்டு சமீபத்தில் வைகை ஆற்றுப்பகுதிகள், திருப்பரங்குன்றம் சுற்றிலும் பெய்த கன மழையால் நிலையூர் கால்வாயில் சில நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இக்கண்மாய் நிரம்பி நேற்று முதல் மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மறுகால் தண்ணீர் திருமங்கலம் பகுதி சொக்கனாம்பட்டி, கப்பலுார் சின்னக்குளம், விடத்தக்குளம் உள்பட 10 க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு சென்று சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை