உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெங்காய பயிரில் திருகல் நோயா

வெங்காய பயிரில் திருகல் நோயா

பேரையூர் : பேரையூர் பகுதியில் வெங்காய பயிரில் ஏற்பட்டுள்ள திருகல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ராஜசேகரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.பேரையூர் வட்டார பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டது. இதை தோட்டக்கலைத்துறையினர் உதவி இயக்குனர் தலைமையில் ஆய்வு செய்தனர். அப்போது மழைக்காலங்களில் சின்ன வெங்காய பயிரில் திருகல் நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். உதவி இயக்குனர் கூறியதாவது: நோயின் தாக்கம் தென்பட்டவுடன் கார்பன்டாசிம் அல்லது மேங்கோசெப் பூஞ்சானா கொல்லியை 2.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். நோயை கட்டுப்படுத்த வெங்காய நடவுக்கு முன் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ தொழு உரத்தோடு கலந்து ஆங்காங்கே இட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை