மதுரை : சென்னை-யில் இருந்து திருநெல்வேலிக்கு ராஜபாளையம், தென்காசி வழியாக பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ராஜபாளையம், தென்காசி வழியாக தாம்பரம் -- திருநெல்வேலி ரயில் (06003) ஜன., 11, 13, 16ல் தாம்பரத்திலிருந்து இரவு 9:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி -- தாம்பரம் ரயில் (06004) ஜன.,12,14,17ல் திருநெல்வேலியில் இருந்து மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 3 ஏ.சி மூன்றடுக்கு, 9 ஏ.சி. குறைந்த கட்டண மூன்றடுக்கு, 2 இரண்டாம் வகுப்பு, 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. தாம்பரம்- - துாத்துக்குடி ரயில்
முன்பதிவில்லா தாம்பரம் -- துாத்துக்குடி ரயில் (06001) ஜன.,14, 16ல் தாம்பரத்திலிருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்டு இரவு 10:45 மணிக்கு துாத்துக்குடி வந்து சேரும். மறுமார்க்கத்தில் துாத்துக்குடி -- தாம்பரம் ரயில் (06002) ஜன., 15, 17ல் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு இரவு 8:30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்களில் 22 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், கடலுார், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.