உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 39 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காண உத்தரவு

39 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காண உத்தரவு

மதுரை, : மதுரை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் அரசால் துவக்கப்பட்டது. கடந்த டிச.18 முதல் ஜன.6 வரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மொத்தம் 97 முகாம்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 39 ஆயிரத்து 776 மனுக்கள் பெறப்பட்டன.ஒவ்வொரு முகாமிலும் வருவாய், எரிசக்தி, மின்சாரம், நகராட்சி நிர்வாகம் உட்பட 10 துறைகளின் அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். 'இவற்றை உடனடியாக ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மேலும் 2ம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன' என கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்