மேலும் செய்திகள்
'காலாவதியான' கால்நடை மருத்துவமனை
18-Sep-2025
சோலை நகருக்கு வந்த சோதனை
16-Sep-2025
சோழவந்தான் : சோழவந்தான் அருகே கீழப்பெருமாள்பட்டியில் மேல்நிலைத் தொட்டி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது என, அப்பகுதியினர் கவலை தெரிவித்தனர். அப்பகுதி வைஜெயந்தி கூறியதாவது: இப்பகுதி ஊர் மந்தையில் ரேஷன் கடை அருகே மேல்நிலைத் தொட்டி உள்ளது. கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் பராமரிப்பின்றியும் உள்ளது. துாண்களில் காரை பெயர்ந்து கம்பிகள் தெரிகிறது. தொட்டியின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது தொட்டியில் இருந்து காரை பெயர்ந்து விழும். மந்தை வழியே தினமும் ஏராளமானோர் சென்று வருகிறோம். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கவும் ஏராளமானோர் வந்து செல்வர். தொட்டியில் இருந்து விழும் காரையால் விபத்து ஏற்பட்டு விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் பலனில்லை. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொட்டியை சரி செய்ய வேண்டும் என்றார்.
18-Sep-2025
16-Sep-2025