போக்சோ வழக்கில் பெயிண்டர் கைது
போக்சோ வழக்கில் பெயிண்டர் கைதுஈரோடு, டிச. 1-ஈரோடு, கொல்லம்பாளையம், தங்கபட்டகாரர் வீதியை சேர்ந்தவர் தென்னரசு, 31; பெயிண்டரான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரித்தனர். போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தென்னரசுவை நேற்று கைது செய்தனர்.