உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக.16 வரை ஓவியக் கண்காட்சி

ஆக.16 வரை ஓவியக் கண்காட்சி

மதுரை; மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் ஓவியர்கள் மனோகர் தேவதாஸ், பெருமாளின் படைப்புகளின் கண்காட்சியை அபராஜிதா பவுண்டேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் அரிஅரவேலன் துவங்கினார். அரவிந்த் லைக்கோ எமிரைடஸ் இயக்குநர் துளசிராஜ், மருத்துவமனை மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா உடன் இருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஓவியர்கள் பிரபாகர் வேதமாணிக்கம், ரமணன், ரவி பேலட் ஆகியோர் ஓவியங்களின் தனித்தன்மை பற்றியும், டிஜிட்டல் ஓவியத்தின் வளர்ச்சி குறித்தும் பேசினர். ஆக.16 வரை நடக்கவுள்ள இக்கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பார்வையாளர்கள் தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை