உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓவியப்பயிற்சி பட்டறை

ஓவியப்பயிற்சி பட்டறை

மதுரை: மதுரையில் எப்.ஓ.எச்.எஸ். பாண்டியர் அமைப்பு, அரசு அருங்காட்சியம் சார்பில் காந்தி மியூசியத்தில் பாண்டிய நாட்டுக் கலை மரபு குறித்த ஓவியப் பயிற்சிப் பட்டறை நடந்தது.மதுரையைச் சேர்ந்த 15 ஓவியர்கள் சுவரோவியங்கள், சிற்பங்களை வரைந்தனர். ஓவியங்களை ஜே.சி. ரெசிடென்சியில் கண்காட்சிக்காக வைத்தனர். சிறப்பு விருந்தினரான சினிமா இயக்குநர் கரு. பழனியப்பன் பேசுகையில், காமிக்ஸ் புத்தகங்கள் மூலம் கிடைத்த படைப்பாற்றலே திரைப்படங்களின் காட்சியமைப்பிற்கு உதவியாக இருக்கின்றன. ஒலியும் அசைவும் இன்றி ஒரு செய்தியைப் பகிருவது கலை ஓவியம்.பாரம்பரிய ஓவிய மரபை மீட்டும் இது போன்ற பயிற்சிப்பட்டறைகள், ஆயிரக்கணக்கான ஓவியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக மாற வேண்டும் என்றார்.மாவட்ட தலைவர் ரமா ஸ்ரீகிருஷ்ணா, சென்னை தலைவர் ஷர்மிளா தேவதாஸ் பங்கேற்றனர். தமிழ் இணையப் பல்கலை கலை வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன், அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாளர் மருது பாண்டியன், ஓவியர் சிவா விழாவை ஒருங்கிணைத்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி