உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு பிரம்படி பெற்றோர் போராட்டம் ஆசிரியருக்கு இடமாறுதல்

மாணவர்களுக்கு பிரம்படி பெற்றோர் போராட்டம் ஆசிரியருக்கு இடமாறுதல்

எழுமலை: எழுமலை அருகே வீட்டுப் பாடம் எழுதி வராத 2 ஆம் வகுப்பு மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். எழுமலை அருகே டி.கிருஷ்ணாபுரம் அரசு துவக்கப்பள்ளியில் 120க்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளியில் 2 ஆம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றும் கார்த்திக், நேற்று முன்தினம் வீட்டுப்பாடம் எழுதாமல் சென்ற மாணவ, மாணவியர் 6 பேரை பிரம்பால் அடித்ததில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த பெற்றோர், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டியன், வட்டார கல்வி அலுவலர் திலகவதி, எம்.கல்லுப்பட்டி போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பெற்றோர் கோரிக்கையை ஏற்று மாவட்ட கல்வி அலுவலர் கணேசன், ஆசிரியர் கார்த்திக்கை பணிமாறுதல் செய்து உத்தரவிட்டதால் பெற்றோர் சமாதானமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி