உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நவ.11ல் பாஸ்போர்ட் குறைதீர் கூட்டம்

நவ.11ல் பாஸ்போர்ட் குறைதீர் கூட்டம்

மதுரை : மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நவ.,11 காலை 10:00 மணிக்கு 'பாஸ்போர்ட் அதாலத்' நடத்த உள்ளனர். கடந்த மார்ச் 31க்கு முன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை, பாஸ்போர்ட் சேவை மையத்தில் சமர்ப்பித்து, இதுவரை பாஸ்போர்ட் கிடைக்காதவர்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், சுய கையொப்பம் இட்ட கடிதத்தில் விண்ணப்ப எண், அலைபேசி எண்ணுடன் விரைவு தபால் மூலம், 'மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாரதி உலா வீதி, ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை- 625 002' என்ற முகவரிக்கு நவ.,4க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது, 'பாஸ்போர்ட் அதாலத் - நவம்பர் 2025' என எழுத வேண்டும். மேலும் விண்ணப்பத்தின் நகலை rpo.mea.gov.inஎன்ற இ மெயில் மூலமும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த இ மெயில் பொருளிலும் பாஸ்போர்ட் அதாலத் - நவம்பர் 2025 என குறிப்பிட வேண்டும் என பாஸ்போர்ட் அதிகாரி வசந்தன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை