உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வூதியர் சங்க மாநாடு

ஓய்வூதியர் சங்க மாநாடு

திருநகர்: மதுரை திருநகரில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு திருப்பரங்குன்றம் வட்ட கிளை சார்பில் நடந்தது. தலைவர் தனபாண்டியன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பிச்சுமணி வரவேற்றார். துணைத் தலைவர்கள் எர்னஸ்ட் தேவராஜ், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் செல்வம் பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், தனம் தீர்மானங்கள் வாசித்தனர். துணைத் தலைவர் கீதா நன்றி கூறினார். 70 வயது பூர்த்தியான அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் தினகர்சாமி, செயலாளர் பாலமுருகன், தலைவர் கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ