உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

மதுரை: மதுரையில் அரசு உதவிபெறும் கல்லுாரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அலுவலர் சங்கக் கூட்டம் மாநிலத் தலைவர் ஸ்டீபன் நிக்கோலஸ் தலைமையில் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடிஓய்வூதியர் 70 வயது நிரம்பியவுடன் ஊதியத்தை 10 சதவீதம் உயர்த்தி தர வேண்டும். அனைத்து விதமான சிகிச்சையையும் இலவசமாக அளிக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வு பலன் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர்கள் திருநாவுக்கரசு, மணி, இணைச் செயலாளர் மணி, பொருளாளர் கஜலட்சுமி, மாவட்டத் தலைவர் கல்யாண சுந்தரம், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை