மேலும் செய்திகள்
கலெக்டரிடம் ஆவின் பால் முகவர்கள் வலியுறுத்தல்
22-Jul-2025
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூகநலத்துறை துணை கலெக்டர் கார்த்திகாயினி பங்கேற்றனர். மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.,), மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (எல்.பி.எப்.,), துாய்மை பணியாளர் மேம்பாட்டு இயக்கம் (எல்.எல்.எப்.,) அமைப்புகள் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த பணியாளருக்கும் தீபாவளி போனஸாக ஒருமாத சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், பாலசுப்ரமணியன், தங்கவேலு, பூமிநாதன், முத்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தேவரின் தேசபக்த முன்னணி சார்பில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கதிரவன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி திருமாறன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் வேலுச்சாமி, மூவேந்தர் எழுச்சிக்கழகம் சார்பில் கவிக்குமார் உட்பட 12 அமைப்புகளின் நிர்வாகிகள் அளித்த மனுவில், ''அரசு மாணவர் விடுதிகள் சமூகநீதி விடுதிகள் என்ற ஜூலை 10ல் வெளியிடப்பட்ட அரசாணையை 20 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தனர். சமூகஆர்வலர் சுந்தரராஜ் மனுவில், ''மேலுார் பகுதியில் மழை இல்லாமல் கண்மாய் வறண்டு, பாசனம், குடிநீர், கால்நடைகளுக்கு தீவனம் இன்றி 3 மாதங்களாக வறட்சி நிலவுகிறது. அணையில் நீர் இருப்பு உள்ளதால் மேலுார் வட்டாரத்திற்காக ஒரு வாரம் தண்ணீர் திறக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
22-Jul-2025