பக்தர்கள் கிரிவலம்
பேரையூர்: பேரையூர் அருகே தேவன் குறிச்சி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்று காலை 8:00 மணிக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலை சந்திர கிரகணம் என்பதால் காலையிலேயே கிரிவலம் நடந்தது. இதற்காக பேரையூர், டி.கல்லுப்பட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.