உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீரர்கள் விழிப்புணர்வு

வீரர்கள் விழிப்புணர்வு

பெருங்குடி; மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு, தேசபக்தியை ஏற்படுத்தவும், தியாகிகளின் தியாகத்தை நினைவு கூரும் வகையிலும் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 36 பேர் துணை கமாண்டன்ட் விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் தர்ஷனா நாயர் தலைமையில் தேசிய கொடியை ஏந்தி பெருங்குடி வரை ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !