உள்ளூர் செய்திகள்

கவியரங்கம்

மதுரை: மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரை கவிஞர் பேரவை சார்பில் 'தமிழ் ஓர் அறிவியல் மொழி' எனும் தலைப்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது. பேரவைத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். கவிஞர் ரவி வரவேற்றார். துணைச் செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்தார். கவிஞர்கள் வரதராஜன், கங்காதரன், குறளடியான், லிங்கம்மாள், இதயத்துல்லா, ஜெயராமன், பழனி, முனியாண்டி, பொன் பாண்டி, பால கிருஷ்ணன், ஆசிரியை சத்யா, ஆசிரியர் வேல்பாண்டியம் கவிதை பாடினர். புலவர்கள் ஆறுமுகம், முருகு பாரதி, வித்யாபாரதிக்கு புரட்சிக் கவிஞர் மன்ற தலைவர் வரதராஜன் விருது வழங்கினார். துணைத் தலைவர் வரதராஜன் நன்றி கூறினார். பேராசிரியர் அதிவீர பாண்டியன், மோகன கண்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை