உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாட்டுத்தாவணிக்கு வெடிகுண்டு மிரட்டல் பஸ்சில் சென்றவரை கைது செய்த போலீசார்

மதுரை மாட்டுத்தாவணிக்கு வெடிகுண்டு மிரட்டல் பஸ்சில் சென்றவரை கைது செய்த போலீசார்

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை அரசு பஸ்சை நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இந்த பஸ் ஸ்டாண்டில் வெடிகுண்டு இருப்பதாக போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு ஒருவர் தெரிவித்தார். போலீசார் சோதனை செய்ததில் புரளி எனத்தெரிந்தது. விசாரணையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெள்ளான்கோயிலைச் சேர்ந்த வெங்கடாசலம் 46, என்பவர் தவறான தகவல் தந்து போலீசாரை அலைக்கழித்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: வெங்கடாசலம் கோபிசெட்டிபாளையத்தில் கூலி வேலை செய்கிறார். சொந்த ஊர் துாத்துக்குடி செல்ல மாட்டுத்தாவணிக்கு வந்தபோது அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. போதையில் இருந்தவர் கூட்டம் கலைவதற்காக கன்ட்ரோல் ரூமிற்கு போன் செய்து குண்டு இருப்பதாக தவறான தகவல் அளித்துவிட்டு பஸ்சில் புறப்பட்டார். அலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை காண்பித்தது. உள்ளூர் போலீசாரின் உதவியுடன் பஸ்சை நிறுத்தி வெங்கடாசலத்தை கைது செய்தோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை