| ADDED : நவ 13, 2025 06:12 AM
தெப்பக்குளத்தில் மிதந்த உடல்
மதுரை: மாரியம்மன் தெப்பக்குளத்தில் நேற்று காலை 55 வயது ஆண் உடல் மிதந்தது. அவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர். கொலை வழக்கில் ஒருவர் கைது
மேலுார்: நொண்டி கோவில்பட்டி கட்டட தொழிலாளி மணிமாறன் 26. நவ.9 இரவு நண்பர்களுக்குள் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இருவர் கைதான நிலையில் நேற்று சூவான்சான்பட்டி ராஜேஷ் 24, கைது செய்யப்பட்டார். ஆட்டோ மோதி பலி
மேலுார்: உலகநாதபுரம் வல்லரசு 25. நேற்று முன்தினம் மாலை சொந்த ஊருக்கு டூவீலரில் சென்றார். பெருமாள்பட்டி அருகே எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது மோதியதில் இறந்தார். குண்டர் சட்டத்தில் இருவர் கைது
மேலுார்: கீழவளவு பாரதிராஜா 24, வாச்சாம்பட்டி ரேவந்த் 23. இருவர் மீதும் கொள்ளை, கொலை வழக்குகள் உள்ளதால் எஸ்.பி., அரவிந்த் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பிரவீன்குமார் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை மதுரை சிறையில் உள்ள இருவரிடமும் இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழங்கினார். விபத்தில் ஒருவர் பலி
சோழவந்தான்: பள்ளபட்டியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் 30, தினேஷ்குமார் 20. இருவரும் டூவீலரில் சோழவந்தானிலிருந்து பள்ளப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். கருப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் டூவீலரின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். தினேஷ் குமார் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.