உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையில் பாலிதீன் பைகள் கால்நடைகளுக்கு ஆபத்து

குப்பையில் பாலிதீன் பைகள் கால்நடைகளுக்கு ஆபத்து

வாடிப்பட்டி : சமயநல்லுார் மெயின் ரோட்டில் ஊராட்சி, பரவை பேரூராட்சி ஊர்மெச்சிகுளம், அண்ணா நகர் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வரும் நிலையில் போதிய தீவனம் கிடைக்காமல் கால்நடைகள் அவதிப்படுகின்றன. கால்நடை வளர்ப்போர் சிலர் அவைகளை ரோட்டில் அவிழ்த்து விடுகின்றனர். ரோட்டோரங்களில் கொட்டப்படும் குப்பையில் உள்ள பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேர்த்து சாப்பிட்டு ஜீரண சக்தி இல்லாமல் வயிற்று நோய் ஏற்படுகிறது. பாலிதீன் பைகள் வயிற்றுக்குள்ளே தங்கி தீராத செரிமான கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் உடல்நிலை பாதிக்கும் பசுக்கள் மந்தமாகி ரோட்டிலேயே படுத்து விடுவது, நடக்க முடியாமல் நடந்து செல்வது என போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. ரோட்டோரங்களில் பாலிதீன் பையில் குப்பை கொட்டுவோர், கால்நடைகளை அவிழ்த்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ