உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊருணியில் குவியும் பாலிதீன் கழிவுகள்

ஊருணியில் குவியும் பாலிதீன் கழிவுகள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி பேரையூர் ரோட்டில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாக்கடைகள் முழுவதும் கவண்டன்பட்டி 23, 24 வார்டு பகுதிகளில் உள்ள 2 ஊருணிகளுக்கான நீர்வரத்து ஓடைகளில் கலந்து செல்கிறது.கழிவுநீர் கால்வாய்களில் சேரும் பாலிதீன், பிளாஸ்டிக் குப்பை, குடிநீர் பாட்டில்கள் அனைத்தும் இந்த ஊருணிக்குள் வந்து சேர்கிறது. நகராட்சி பணியாளர்கள் அவ்வப்போது கால்வாய்களை சுத்தம் செய்தாலும், மேலும், மேலும் வந்து குவிகிறது. ஊருணியில் நிரம்பியுள்ள சாக்கடை கழிவு நீரில் இருந்து துர்நாற்றம், கொசுக்கள் உற்பத்தியாகி அந்தப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது.மழை பெய்தால் கழிவு நீருடன் சேர்ந்து மழைநீரும் வெளியேறி அந்தப்பகுதியில் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஊருணிக்குள் சாக்கடை கழிவு நீர் கலக்கும் முன்பாக கழிவுகளை அகற்றி நீரை சுத்தப்படுத்துவதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ