உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் பொங்கல் விழாக்கள்

மதுரையில் பொங்கல் விழாக்கள்

மதுரை * மதுரை பெருங்குடி அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிர்வாகி ஜெயவீரபாண்டியன் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. முதல்வர் ஜெயஷீலா, துணை முதல்வர் ஸ்டெல்லா ஜெயமணி முன்னிலை வகித்தனர். பாரம்பரிய ஆசிரியர்கள் பொங்கலிட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.* மதுரை தியாகராஜர் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் காந்திதுரை ஒருங்கிணைத்தார். மாணவர்கள் பொங்கல் வைத்து, ஜல்லிக்கட்டு, சண்டைச்சேவல், ரேக்ளா வண்டி, ஆட்டுக்கிடாய்கள் காட்சிப்படுத்தப்பட்டன. * மதுரை நகர் காங்., அலுவலகத்தில் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கொண்டாடப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, துரையரசன், துணைத் தலைவர்கள் பாலு, மலர் பாண்டியன், சுப்பையா, நிர்வாகிகள் ராஜ பிரபாகரன், காமராஜ், மகிளா காங்., நிர்வாகிகள் ஷானவாஸ் பேகம் பங்கேற்றனர்.* மதுரை வடக்கு தாலுகாவில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தில் நிர்வாகிகள் பொங்கல் விழா கொண்டாடினர். தாசில்தார் மஸ்தான் கனி உட்பட பலர் பங்கேற்றனர்.* மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஒப்பந்ததாரர்கள், நலச் சங்கம் சார்பில் பொங்கலிட்டு பொது மக்களுக்கு வழங்கினர். சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவர் கண்ணையா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் மாயராஜ், நிர்வாகிகள் முத்துவிஜயன், சாந்தாராம், சங்கையா பங்கேற்றனர்.* மதுரை அரசு அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் படிக்கட்டுகள் தன்னார்வலர் அமைப்பு சார்பில் தலைவர் மலைச்சாமி தலைமையில் காப்பகத்தின் 75 குழந்தைகளுடன் பொங்கல் வைத்து, போட்டிகள் நடத்தி, கிராமியக் கலைகள் நிகழ்த்தினர். இளம் விவசாயி கார்த்திகேயன் போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார். தன்னார்வலர்கள் லாரன்ஸ், பிரம்மசக்தி, துர்கா, பாண்டி மீனா, ஓம் பிரகாஷ், லோக குமரேசன் ஏற்பாடுகளை செய்தனர்.* மதுரை அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடந்த விழாவில் தலைமையாசிரியர் ேஷக் நபி வரவேற்றார். நலக்குழு துணை தலைவர் அலாவுதீன் தலைமை வகித்தார். மாணவர் சங்க தலைவர் சுபாஷ், நலக்குழு கிளை செயலாளர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், தாளாளர் முகமது இதிரிஸ், வக்புவாரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் முகமது அப்துல்லா, கவுன்சிலர்கள் முத்துமாரி, ராதா பங்கேற்றனர். ஆசிரியர்கள் தமிழ்க்குமரன், நுாருல்லா, அபுதாஹிர், தவுபீக், அல்ஹாஜ், ெஷரீப் ஏற்பாடு செய்தனர்.

திருப்பரங்குன்றம்

சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசினார். பேராசிரியர்கள் மஞ்சுளா, விஜயலட்சுமி, உமா மகேஸ்வரி, மேகலா, ரோகிணி, கார்த்திகா தேவி, ரேணுகா ஒருங்கிணைத்தனர். ரங்கோலி, ஆல்பம் தயாரித்தல் உட்பட போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கினர். பேராசிரியர் ரோகிணி நன்றி கூறினார்.* திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரி விழாவிற்கு தாளாளர் நோவா தலைமை வகித்தார். கிராமிய நடனங்கள் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. ஒவ்வொரு ஆண்டு மாணவரும் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். * திருப்பரங்குன்றம் அமிர்த வித்யாலயம் பள்ளி விழாவிற்கு முதல்வர் சசி ரேகா தலைமை வகித்தார். மாணவர்களுக்கு போட்டி நடத்தி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை