உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரியில் பொங்கல் விழா

பள்ளி, கல்லுாரியில் பொங்கல் விழா

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பள்ளி, கல்லுாரிகளில் விழா கொண்டாடப்பட்டது.வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. எஸ்.என். கல்லுாரி பேராசிரியர் ஜெயக்கொடி பேசினார். ஆசிரியை சாந்தி வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியைகள் விஜயசாரதி, இந்துமதி, ஜெயலட்சுமி ஏற்பாடு செய்தனர். ஆசிரியை நாகேஸ்வரி நன்றி கூறினார்.இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பொங்கல், ஆண்டு, விளையாட்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன. ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் கருப்பசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாண்டிச்செல்வி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை கனகலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் டாக்டர் உலகமணி ஈடாடி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கினார். கல்விக்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா, பத்மநாதன், எழுத்தாளர் அய்யனார் ஈடாடி பேசினர். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் மகேந்திரபாபு தொகுத்து வழங்கினார். ஆசிரியர் முத்துராஜா ஒருங்கிணைத்தார். உதவி தலைமையாசிரியர் லஜபதி நன்றி கூறினார். கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர் முரளி, முதல்வர் ஆனந்தன், துணை முதல்வர் சகாதேவன், துறைத் தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.மதுரை செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா நடந்தது. பிளஸ்1 மாணவர்களுக்கு பொங்கல் வைக்கும் போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் ஸ்டீபன் லுார்து பிரகாசம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.சவுராஷ்டிரா கல்லுாரியில் பொங்கல் விழா செயலாளர் குமரேஷ் தலைமையில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் ஸ்ரீனிவாசன், சுயநிதிப் பிரிவு இயக்குனர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை செய்தனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சோழவந்தான்

சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பென்சாம் தலைமை வகித்தார். தலைவர் சிவபாலன் முன்னிலை வகித்தார். முதல்வர் கலைவாணி வரவேற்றார். மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட கலை மற்றும் சிலம்பாட்டம், வாள் வீச்சு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்து நாடார் உறவின்முறை உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பெருமாள், சவுந்தரபாண்டியன், சகாய மலர்விழி செய்திருந்தனர்.பரவை மங்கையர்கரசி மகளிர் கலை கல்லுாரியில் செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். இயக்குனர் சக்தி பிரனேஷ், முதல்வர் உமா பாஸ்கர் முன்னிலை வகித்தனர். கல்வி புலத் தலைவர் செந்துார் பிரியதர்ஷினி வரவேற்றார். கல்லுாரி வளாகத்தில் மாணவிகள் பொங்கல் வைத்தனர்.வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் இனிக்கோ எட்வர்ட் ராஜா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் விஜய்ரங்கன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அங்காளஈஸ்வரி முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். ஆசிரியர்கள் சுரேஷ், இளஞ்செழியன், வரேந்திரா, கலாவதி, சகுந்தலா தேவி, கேத்தரின், அனிதா உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை ரெசிஸ்ராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ