அஞ்சலகம் வேலை நேரம் நீட்டிப்பு
மதுரை: மதுரை கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவித்துள்ளதாவது: சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் செயல்பட்டு வரும் துணை அஞ்சலகத்தின் வேலை நேரம் மாலை 6:30 மணி வரை செயல்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீதிமன்றம் வரும் மக்கள், வழக்கறிஞர்கள் பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.